இண்டேன் கேஸ் சிலிண்டரை மிஸ்டு கால் கொடுத்து எளிதாக புக் செய்வது எப்படி? How to book Indane Gas cylinder using Missed call service| Gas cylinder missed call booking in tamil

இண்டேன் கேஸ் சிலிண்டரை மிஸ்டு கால் கொடுத்து எளிதாக புக் செய்வது எப்படி?

How to book Indane Gas cylinder using Missed call service| Gas cylinder missed call booking in tamil   

ஒரே ஒரு மிஸ்டு கால் தான். வீட்டுக்கே வரும் கேஸ் சிலிண்டர்..!


இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்கள் 84549 55555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் எளிய முறையில் கேஸ் புக் செய்யலாம்.


சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய ஐவிஆர்எஸ் முறை பின்பற்றப்படுகிறது. அதில் பதிவு செய்வது சிரமமாக உள்ளதாக பலரும் கருதுகின்றனர். நவம்பர் 1 முதல், இண்டேன் கேஸ் சிலிண்டர் உபயோகிப்பாளர்கள் சிலிண்டர்களை புக் செய்ய புதிய எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுமைக்கும் எங்கிருந்தாலும், இந்த ஒரே நம்பரில் இனி புக் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது. எல்பிஜி ரீஃபில் புக்கிங் செய்வதற்கு பொதுவான முன்பதிவு எண் 7718955555. இதை வாடிக்கையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். இந்த முறையில் தமிழில் பதிவு செய்ய 9ஆம் எண்ணை அழுத்த வேண்டும். படிக்காத பலருக்கும் இந்த முறை கடும் சிரமமாக உள்ளது.


இந்த நிலையில் இண்டேன் கேஸ் சிலிண்டர் உபயோகிப்பாளர்கள் கேஸ் சிலிண்டர்களை புக் செய்ய மிஸ்ட் கால் கொடுக்கும் வசதியை பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிமுகம் செய்துள்ளார். 84549 55555 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுப்பதன் மூலம் புதிய சிலிண்டருக்கு பதிவு செய்யலாம்.

How to book Indane Gas cylinder using Missed call service| Gas cylinder missed call booking in tamil
Indane Gas cylinder



இச்சேவையை அறிமுகப்படுத்தி வைத்து பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மக்கள் மிக எளிதில் சமையல் கேஸ் சிலிண்டரை பெற இம்முறை உதவும் எனத் தெரிவித்தார்.

கேஸ் முகவரிடம் நீங்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டு கால் கொடுத்தால் மட்டும் கேஸ் புக்கிங் செய்யப்படும். மற்ற எண்களிலிருந்து மிஸ்டு கால் கொடுத்து புக் செய்ய முடியாது. இதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் அறிவிக்ப்பட்டுள்ளது.


இதன் மூலம் கேஸ் புக் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை. மற்ற எந்த தகவலையும் பதிவு தேவையில்லை என்பதால் வயதனாவர்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு இந்த சேவை சிறந்ததாக அமையும் எனவும் தெரிவித்தார்.

டெல்லியில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம், தற்போது சென்னை, பெங்களூரூ, ஜைதராபாத் உள்ளிட்ட 7 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. புவனேஷ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் அங்கமாக மக்களுக்கான இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Previous
Next Post »