சரியான புரிதல் முக்கியம் _ தமிழ் கதைகள்_ Tamil stories

திருமணமான ஒருவன் ஞானியின் காலைப் பிடித்து, அழுதுகொண்டே...

"திருமணம் ஆனதில் இருந்து நிம்மதியில்லை. தினம் தினம் சண்டை..எனக்கு ஒரு நல்வழி சொல்லுங்கள் ஐயா"

எனக் கேட்டான்.


அதற்கு அவர் "கொஞ்சம் உட்கார்" எனச்சொல்லி விட்டு, வீட்டினுள் இருக்கும் மனைவியை நோக்கி...

"விளக்கை பொருத்திக் கொண்டு வா" எனச் சொன்னார்.

அந்த அம்மாளும் மறுமொழி ஏதும் சொல்லாமல் விளக்கு  ஏற்றி கொண்டுவந்து வைத்துவிட்டுச் சென்றார்!

பின், குடிப்பதற்கு பால் கொண்டு வரும்படி கேட்டார்!

அவரும் இருவருக்கும் பால் கொண்டு வைத்துவிட்டுப் போனார்.

அந்த அம்மா " பாலில் சர்க்கரை சரியா இருக்கா?" எனக் கேட்க..,அவரும்...,"சர்க்கரை சரியா இருக்கு" எனச் சொன்னார்.

உடனே...நிம்மதி தேடி வந்தவன்..ஞானியின் காலில் விழுந்து வணங்கி...

"ஐயா...புரிந்து கொண்டேன் ஐயா....மத்தியான வெயிலில் விளக்கு ஏற்றி வரச் சொல்கிறீர்கள்...அவர்களும் ஏன், எதற்கு என கேட்காமல் ஏற்றி வைத்துவிட்டு செல்கிறார்கள்..

கொண்டு வந்த பாலில் ஒரே உப்பு.

அவர்கள் கேட்டதற்கு, சரியா இருக்கு எனச் சொல்கிறீர்கள்...புரிந்து விட்டதய்யா..சந்தோசமான தாம்பத்தியத்தின் சூட்சமம்!" என்றானாம்!

Previous
Next Post »