தைப்பொங்கலையொட்டி ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் தலா ரூ.2,500 வழங்கப்படும்.

தைப்பொங்கலையொட்டி ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் தலா ரூ.2,500 வழங்கப்படும்.

சேலம் எடப்பாடியில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், அடுத்த ஆண்டு பொங்கல் பரிசாக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். 

Ration card 2021

மேலும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஒரு முழு நீளக் கரும்பு ஆகியவை அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இது வரும் ஜனவரி 4ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் இதற்கான டோக்கன் வீடு வீடாக சென்று வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் ரேஷன் கடைகளுக்கு நேரடியாக வந்து பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினார்.

இதன்மூலம் 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு உடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை இரண்டரை மடங்கு அதிகமாக ரொக்கம் வழங்கப்படுவது தமிழக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

அதேசமயம் கொரோனா ஊரடங்கால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் தமிழக மக்களுக்கு அரசின் இந்த அறிவிப்பு சற்றே ஆறுதலாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.



Previous
Next Post »

1 comments:

Click here for comments
Unknown
admin
19 December 2020 at 23:07 ×

👍👍👍

Congrats bro Unknown you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar